பாஜகவின் 3-வது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, 50 – 60 ஆண்டுகளை காட்டிலும், கடந்த 10 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஊழல் செய்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள், ஆனால் அவர்களால் என்னை தடுக்க முடியாது.
ஊழல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் எதிரான நடவடிக்கை 3-வது ஆட்சியில் வேகம் எடுக்கும். மிரட்டல் மற்றும் துஷ்பிரயோகத்தால் என்னை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி,இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார்.
எண்ணங்கள் சரியாக இருக்கும் போது வளர்ச்சி ஏற்படும். சரியான நோக்கங்கள் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.