ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! - அண்ணாமலை விமர்சனம்
Oct 17, 2026, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 09:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெற்றிலைக் காளிப்பாளையம், NGGO காலனி, செங்காளிபாளையம், வெள்ளகினார், நஞ்சைகவுண்டன்பாளையம், உருமாண்டன்பாளையம், விஸ்வநாதபுரம், துடியலூர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது நாடு ஊழல் நாடு என்று அழைக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் பாதி, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, உண்மையான மக்களாட்சி. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல், மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள், உலகின் முதன்மை நாடாக நமது நாடு உருவாக இடப்படும் அஸ்திவாரமாக அமையும். நாடு முழுவதும் எழுச்சி அலை வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.

ஆனால், தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மாற்றம் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் எப்போதும் இல்லை.

பெண்கள், இளைஞர்கள், அரசியல் வேண்டாம் என்று இருந்தவர்கள் என அனைவரும், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எழுச்சியுடன் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் ஒரு விரல் புரட்சி நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, மக்களை ஏமாற்றி வந்தவர்கள் அனைவரையும், நமது மக்கள் புறக்கணிக்கவிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள், ஊழலற்ற நல்லாட்சி வழங்கிய நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு, அவரது கடின உழைப்பின் பலனாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் ஒரு முறை 400க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை இருக்க வேண்டும்.

கோவையின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நாடாளுமன்றத்தில் நமது குரலை எதிரொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பாரதப் பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

கோவை வளர்ச்சி பெற, விவசாயம் செழிக்க, தொழில் துறை முன்னேற, கோவை அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நமது பாரதப் பிரதமர் அவர்கள் நேரடிப் பார்வையில், நமது கோவை வளர்ச்சி பெற, ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலையாகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies