இந்தியாவின் வளர்ச்சி காரணமாக 2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சியானது 2023-24 நிதியாண்டில் 7.5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்காசியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறுகிய காலத்தில் பிரகாசமாக இருக்கும், என தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியை ஊக்குவிக்க தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும் நாடுகள் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2024-25 நிதியாண்டில் 2.3 சதவீத வளர்ச்சியுடன் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் லேசான மீட்சியும், இலங்கையில் உற்பத்தி வளர்ச்சி 2025ல் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில், 2024 – 25ஆம் நிதியாண்டில் உற்பத்தி 5.7 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிக பணவீக்கம், வர்த்தகம் மற்றும் அந்நியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.
முன்னதாக மார்ச் 27ஆம் தேதி மோர்கன் ஸ்டான்லி 2024-25 நிதியாண்டிற்கான (FY25) இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை அதன் முந்தைய மதிப்பீடான 6.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகத் திருத்தியது.
நடப்பு நிதியாண்டான FY24க்கான வளர்ச்சிக் கணிப்பையும் நிறுவனம் 7.9 சதவீதமாகத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட கணிப்புகள் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
மோர்கன் ஸ்டான்லி தற்போதைய சுழற்சியின் அடையாளங்களாக நாட்டின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை முன்னிலைப்படுத்துகிறார்.