காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 20 கோடி சொத்து உள்ளது. ஆனால் அவருக்கு சொந்தமாக வாகனம் அல்லது குடியிருப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
சுமார் ₹ 9.24 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதில் ரூ. 55,000 ரொக்கம், ரூ. 26.25 லட்சத்திற்கு வங்கி டெபாசிட், ரூ. 4.33 கோடிக்கு பத்திரங்கள் மற்றும் பங்குகள், ரூ. 3.81 கோடிக்கு மியூச்சுவல் ஃபண்ட், ரூ. 15.21 லட்சத்திற்கு தங்கப் பத்திரங்கள் மற்றும் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கும்.
மேலும் ராகுல் காந்திக்கு ரூ. 11.15 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. அவர் சகோதரி பிரியங்கா காந்தியுடன் கூட்டாக டெல்லி மெஹ்ராலியில் உள்ள விவசாய நிலங்களும் இதில் அடங்கும்.
மேலும் ராகுல் காந்திக்கு குரு கிராமில் அலுவலக இடம் உள்ளது. அதன் மதிப்பு தற்போது ரூ. 9 கோடி. மேலும் தான் எதிர்கொள்ளும் வழக்குகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.