கேரளாவில் தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை ஆளும் அரசுகள் சிறுபான்மை ஓட்டுக்காகத் தேசத்தைப் பயங்கரவாதிகளிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உடை அணிந்து தமிழகத்தை அதிரவிட்டதன் தொடர்ச்சியாக, தற்போது கேரளத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பின் சீருடை அணிந்து கொண்டு ஊர்வலம் சென்றது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்து மக்களைப் பிரித்துப் பிரிவினை பேசிடும் திராவிட, கம்யூனிச அரசுகள் இஸ்லாமியர்களின் ஓட்டுக்காகத் தேசத்தின் பாதுகாப்பை கைவிடும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















