நாடாளுமன்ற தேர்தலுக்கான 10-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
அவர் 2007 முதல் 2014 வரை தந்தை வசம் இருந்த பல்லியா தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 2014 தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
எஸ்.எஸ்.அலுவாலியா அசன்சோலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சண்டிகரில் சஞ்சய் டாண்டனையும், பி.பி. சரோஜுக்கு மச்லிஷாஹரில் இருந்து டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்வீர் சிங் தாக்கூர் மெயின்புரியில் போட்டியிடுகிறார். வினோத் சோங்கர் கவுசாம்பி தொகுதியிலும், பிரவீன் படேல் புல்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.பிரயாக்ராஜ் தொகுதியில் இருந்து நீரஜ் திரிபாதி களமிறக்கப்பட்டுள்ளார்.
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க சுமார் 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்றது, இந்திய தேசிய காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை வென்றது, இந்திய தேசிய காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.