நாடாளுமன்ற தேர்தல் - 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் – 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலுக்கான 10-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

அவர் 2007 முதல் 2014 வரை தந்தை வசம் இருந்த பல்லியா தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 2014 தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய அவர் பின்னர்  மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

எஸ்.எஸ்.அலுவாலியா அசன்சோலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சண்டிகரில் சஞ்சய் டாண்டனையும், பி.பி. சரோஜுக்கு மச்லிஷாஹரில் இருந்து டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்வீர் சிங் தாக்கூர்  மெயின்புரியில் போட்டியிடுகிறார். வினோத் சோங்கர் கவுசாம்பி தொகுதியிலும், பிரவீன் படேல் புல்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.பிரயாக்ராஜ் தொகுதியில் இருந்து நீரஜ் திரிபாதி களமிறக்கப்பட்டுள்ளார்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க சுமார்  97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்றது, இந்திய தேசிய காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை வென்றது, இந்திய தேசிய காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

Tags: bjputtar pradeshbjp canditate listsp
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி அரசின் சாதனைகள் : புதிய பிரச்சார பாடலை வெளியிட்டது பாஜக!

Next Post

இன்றைய இராசிபலன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies