டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 9 ஆம் தேதி பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறை கைது செய்தது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி ஆனது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.