காங்கிரஸ் கட்சி உள்கட்சி பூசல்களால் டைனோசர்கள் போல அழிந்துவிடும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கணித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கௌச்சரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாவ்ரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனில் பலுனியை ஆதரித்து பேசினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
காங்கிரசுக்குள் உள்ள உட்கட்சி பூசல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்” வீட்டிற்கு ஒப்பிட்டு, அக்கட்சியின் தலைவர்கள் தினசரி ஒருவருக்கொருவர் ஆடைகளை கிழித்துக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.
“காங்கிரஸில் இருந்து தலைவர்கள், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வில் இணைகிறார்கள். இன்னும் சில வருடங்களில் டைனோசர் போல காங்கிரஸ் அழிந்துவிடுமோ என்று அச்சபடுவதாக தெரிவித்தார். 2024க்கு பிறகு சில வருடங்கள் கழித்து காங்கிரஸின் பெயரை எடுத்துக் கொண்டால், குழந்தைகள் யார் என்று கேட்பார்கள்? எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கட்சி என்பது பிக்பாஸ் வீட்டைப் போலவே மாறிவிட்டது. தினந்தோறும் ஒருவருக்கொருவர் ஆடைகளை கிழித்து வருகின்றனர் என்றார்.