திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை
Oct 16, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்,டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது :

ஏற்கனவே தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள், மீண்டும் தினகரனை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.

நாடு முழுவதும், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும், பிரதமர் மோடிக்கு துணையாக, தமிழகத்தின் தேனி தொகுதியிலிருந்து தினகரனை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் தேர்தல். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், 35 மாதங்களாக வெறும் விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை, தமிழக அரசியலை விட்டு அப்புறப்படுத்தவிருக்கும் தேர்தல்.

தினகரன் வெற்றி பெற்றால், எடப்பாடி அவர்கள் தலைமையிலான அதிமுக காணாமல் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிமுக திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் அண்ணனுக்கு எதிராக கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணன் தினகரன் பக்கம்தான் என்பதை, ஜூன் 4 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.

பிரதமர் மோடி ஆட்சி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி போல விளம்பரம் தேவையில்லாத ஆட்சி. மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ. 174 ஆக இருந்த ஊதியத்தை, ரூ. 319 ஆக உயர்த்தி, மக்களுக்கு ரூ.60,000 கோடி நிதி,  விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6,000 என இதுவரை ரூ.30,000, பல ஆயிரம் கோடி முத்ரா கடனுதவி என சாமானிய மக்கள், விவசாயிகள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவருக்குமான நல்லாட்சி நமது பாரதப் பிரதமர் அவர்களது ஆட்சி.

ஆனால், 2004 – 2014 திமுக காங்கிரஸ் பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு  துரோகத்தைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையின்  நீர்மட்டத்தின் உயரத்தைக் குறைத்த துரோகம், கேரளாவில் இன்னொரு அணையைக் கட்ட அனுமதித்து செய்த துரோகம் என திமுக காங்கிரஸ் ஆட்சி செய்தவை பல.

2G ஊழல் வழக்கால் காங்கிரஸ் மிரட்டலுக்கு திமுக அமைதியாக இருந்து துரோகத்துக்குத் துணை போனது. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு, தமிழர்களின் பாரம்பரிய  விளையாட்டான ஜல்லிக்கட்டை காங்கிரஸ் தடை செய்தது. நமது பிரதமர் மோடி தான் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுவதை உறுதி செய்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு, மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று கூறியது. திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, 35,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுக்க திமுக வந்தால், கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என்று மக்கள் கூற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: TTV DinakaranannamalaiDMKCongresstheni
Share
Tweet
SendShare
Previous Post

கோடை வெப்பத்தை தணிக்க வருகிறது மழை : வானிலை மையம் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Next Post

இந்தியா, சீனா இடையே நிலையான உறவு அவசியம் : சீனா கருத்து!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies