நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றிவருகிறார்.
இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
ஜி20 உள்ளிட்ட சர்வதேச நிகழ்வு இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாஜக கட்சிதான் பிடித்தாக இருக்கும். தமிழக மக்கள் தான் பாஜகவுக்கு உத்வேகம் அளிக்கிறது. வ. உ. சிதம்பரத்தை பின் பற்றி பாஜக ஆட்சி நடத்துகிறது.
காமராஜரை திமுக, காங்கிரஸ், அவமதித்தது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை திமுக அவமதித்தது எனக் மோடி குற்றம் சாட்டினார்.
திமுக, காங்கிரஸ் தமிழகத்தின் உயிர் நாடியான கச்சத்தீவை அண்டை நாட்டுக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இங்குள்ள பெற்றோர்கள் மிகுந்த வருத்ததுடன் உள்ளனர். இங்கு போதையை யார் விற்கிறார்கள் எனக் கேட்டால் குழந்தை சொல்லும் திமுக என்று. போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன். வளர்ச்சி அடைந்த தமிழகம் வேண்டும் என்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழக மக்கள் வழங்குகிறார்கள் எனத் தெரிவித்தார்.