தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது EVM இயந்திரங்களை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் மே 7 -ஆம் தேதி 14 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதன்படி, பெலகாவில், பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தேவநகரில் பிராண்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலத்தில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் வரலாம் என தெரிவித்தவர்.
பாஜகவின் வெற்றிக்காக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகலாக பாடுபட்டு வருவதாகவும், பாஜகவின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்