திருப்பூரில் வேதிப் பொருட்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட இரண்டரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லற்விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வேதிப் பொருட்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட இரண்டரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீசும் வழங்கினர்.