தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உலாவரும் யானைக் கூட்டம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் உணவு தேடியும், வெப்பத்தை தாங்க முடியாமலும் மேக்கரை பகுதிக்குள் காட்டு யானைகள் உலா வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.