கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரமடை சென்னி வீரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டதால், 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.