திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
கோம்பைபட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெரியதுரையான் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி 500 ஆடுகள், 300 கோழிகள் உள்ளிட்டவை பக்தர்களால் வழங்கப்பட்டன.
அவை கருப்பணசாமி முன்னர் பலி கொடுத்து சமைக்கப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்திருந்த பத்தாயிரம் பக்தர்களுக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.