முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது குஜராத் முதலமைச்சராக 15 ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தம்ட மீது எந்த ஊழல் குற்றசாட்டுகளும் இல்லை என்றும், மோடி இன்பத்தை அனுபவிக்க பிறக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்தவற்காக பிறந்துள்ளார் என்றும் கூறினார்.
500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை அவர் விவரித்தார்.
ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்களின் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி அவர்களின் சுயநல நோக்கங்களையும் வளர்ந்த இந்தியாவுக்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் வேறுபடுத்திக் காட்டினார்.ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மூலம் ஏராளமான சொத்துக்களை குவித்ததாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு இந்தியனின் நலனுக்கான திட்டத்தை தொடரவும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
















