ஜனநாயகத்தை அவமதிக்கும் ஒரு கட்சி உள்ளது என்றால், அது காங்கிரஸ் கட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமூக தன்னார்வலர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி எப்போது எல்லாம் இருந்ததோ, அப்போது எல்லாம் விதிமீறல்கள் நடைபெற்றன. மாநில உரிமைகளை பறிக்கும் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தாத ஒரே கட்சி பாஜக மட்டுமே.
காங்கிரஸ் கட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த பல தலைவர்கள் எமர்ஜென்ஸி காலத்தில் அடக்குமுறைக்கு ஆளானார்கள்.
கர்ம வீரர் காமராஜர் போன்ற அரசியல் ஆளுமை மிகுந்த தலைவர்களை, அப்போது டெல்லியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.