கடலூரில் மினி கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் புறவழிச் சாலை வழியாக பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் பெங்களூருவில் இருந்து வந்த மினி கண்டெய்னர் லாரியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது லாரியில், ரகசிய அறை அமைத்து குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், கடத்தி வரப்பட்ட 40 குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.