திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தாவரங்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை 71 வினாடிகளில் கூறி 7 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
நெய்க்காரபட்டி கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் அலியின் மகன் முகமது ஹிசாம், காய்கள், பழங்கள், மலர்களின் அறிவியல் பெயர்களை வரிசைப்படுத்தி 71 நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார்.
மேலும் அகர வரிசையில் அறிவியல் பெயர்களை கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் , மற்றும் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.