2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மோடியே பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பாஜக கட்சி விதிப்படி. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்றால் அமித் ஷாதான் பிரதமராக வருவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பீகார் மாநிலம் பெகுசாராயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பும் வரை மோடி தான் நாட்டின் பிரதமர் என்றும், 2029-ஆம் ஆண்டிலும் மக்கள் விரும்பினால், பிரதமர் மோடி தான் நாட்டை வழிநடத்துவார் என்றும் கூறினார்.