உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் நீள புடவையை போர்த்தி, பாஜக தொண்டர்கள் வழிபாடு நடத்தினர்.
இதையொட்டி, கங்கை கரையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட பாஜக செயலாளர் சிவானந்த் ராய் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியின் நலன் காக்க வேண்டி, கங்கைத் தாய்க்கு புடவை சாத்தி, வழிபாடு மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.