கேரள மாநிலம் புனலூர் பகுதியில் தப்பிசென்ற காட்டுயானையை டிரோன்கள் மூலம் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
புனலூர் கிராமம், அம்பநாடு குடியிருப்பு பகுதிக்குள் காயங்களுடன் ஒரு காட்டுயானை வந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. இதனால் யானையை தேடும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.