நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், இந்தத் தேர்தல் பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லையெனத் தெரிவித்தார். கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றே, இம்முறையும் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும், அண்ணாமலை குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மும்பை நகரம் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இது முற்றிலும் முந்தைய அரசுகளின் தோல்வி எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டதாக நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களையும் சேர்த்து, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்று பெறுவது உறுதி என்றும் அண்ணாமலை கூறினார்.