காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி பகுதியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், தனது சீரிய பணிகளை பார்த்திப்பீர்கள் என்றும், தங்களிடம் ஆசிபெறவே மூன்றவாது முறையாக இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைமைக்கும் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சிறிய கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே, குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் நிற்க முடியும் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
பாலாசாகேப் தாக்கரேவின் ஒவ்வொரு கனவையும் போலி சிவசேனா தகர்த்துவிட்டதாகவும் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அவரது கனவு என்றும் தெரிவித்தார். மேலும் ராமர் கோயிலைப் பற்றி காங்கிரசார் முட்டாள்தனமாகப் பேசுவதைக்கூட, போலி சிவசேனா கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டினார்.