அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆஸம்காரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறினார்.
பிரிவினையின்போது மதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அகதிகள், இந்தியாவில் புகலிடம் தேடி பல ஆண்டுகள் வாழ்வதாகவும், அவர்கள் தங்களது வாக்கு வங்கி இல்லை என்பதால் அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மகாத்மா காந்தியால் ஆட்சிக்கு வந்தவர்கள், அவர் முன்வைத்த போதனைகளை மறந்து விட்டதாகவும் காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்தார். தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸால் ஒருபோதும் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.