மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஜி20 போன்ற மிகப்பெரிய மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவித்தார். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரை இறங்கியதை மேற்கோள் காட்டிய அவர், நிலவில் மூவர்ணக்கொடியை நாட்டி, இந்தியா சாதனை படைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சாதனைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்க முடியுமா? என கேள்வி எழுப்பிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான ஊழல்தான் தலைப்பு செய்தியாக வந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி என்ற தனிநபரால் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் ஒற்றை வாக்குதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.