நீலகிரி மாவட்டத்தில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
நீலகிரியில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், மழை வெள்ளம் தேங்காமல் இருக்கவும் நவீன மோட்டார் மற்றும் பவர் மெஷின் என 43 வகையான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.