தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆதவற்ற மூதாட்டி ஒருவர் பயணிகள் நிழற்கூடத்தில், உணவு இல்லாமல் பரிதவித்து வருகிறார்.
நாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசு நிழற்கூடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிழல் கூடத்தையே தனது வாழ்விடமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மூதாட்டி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய் வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவித்து வருகிறார்.
பொதுமக்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வரும் மூதாட்டி, கடந்த 2 நாட்களாக யாரும் உணவு கொடுக்கவில்லை என்றும் பட்டினியுடன் கிடப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும், திருமணமான இரண்டு மகன்களும் தன்னை அடித்து துரத்தி விட்டதாகவும் மூதாட்டி வேதனையுடன் தெரிவிக்கிறார்.