தேனி மாவட்டம், வெற்றி திரையரங்கம் அருகே சாலையோரம் நடந்து சென்ற நபர் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் 12ம் வகுப்பு முடித்துவிட்ட நிலையில், விடுமுறை காலம் என்பதால் வெற்றி திரையரங்கம் அருகே உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அஜித் என்ற நபர் ஓட்டி வந்த மினிபேருந்து ஹரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.