திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை சாதகமாக பயன்படுத்தி பாலாற்றில் மணல் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பலூர் பாலாற்று படுகையில் உதயேந்திரம் பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் சேதமடைந்ததால் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாலாற்றில் குடிநீர் குழாய்கள் அமைக்க தோண்டிய பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணலை நீரேற்று நிலைய வளாகத்தில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.