சென்னையை அடுத்த மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாதவரத்திலுள்ள கே.கே.ஆர் கார்டன் ஒன்றாவது தெருவில் முத்தையா என்பவர் மருந்தகத்தை நடத்தி வருகிறார்.
இவரது மருந்தகத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அந்த மருந்தகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் 50 பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடையின் உரிமையாளர் முத்தையாவையும் கைது செய்தனர்.
மேலும், அவரது மருந்தகத்திற்கும் சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர்.