"Dog Babu" வரிசையில் "Dogesh Babu" - தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!
Oct 28, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  என்ன நடந்தது? பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.. விரிவாக..

சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பீகாரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டது. ஆதார், ரேசன் கார்டு போன்றவை வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியான ஆவணம் அல்ல என்று  கூறியிருந்த தேர்தல் ஆணையம், இருப்பிடச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்றது.

வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டிய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகேயுள்ள மசௌரி பகுதியில்  RTPS போர்ட்டலில்  Dog Babu என்ற பெயரில் கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்றுக்கு அதிகாரிகள் இருப்பிடச் சான்று வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நாயின் போட்டோவுடன் கூடிய சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தையும் கிளப்பியது.

உடனடியாக அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தபோதும், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்குரிமையை உறுதி செய்வதில் பீகார் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான சாடின.

இந்த நிலையில் நவாடா மாவட்டத்தில் அதே பாணியில் நாய் ஒன்றுக்கு இருப்பிட சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருப்பது அதிகாரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. Dogesh Babu என்ற பெயரில் பெறப்பட்ட விண்ணப்பத்தில், தந்தை பெயர் டாகேஷ் பாபா, தாய் பெயர் டாகேஷ் மாமி, 11வது வார்டு, கரோந்த் கிராமம், நவாடா மாவட்டம் போன்ற விவரங்களை குறிப்பிட்ட நாயின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே Dog babu விவகாரம் பீகாரில் புயலைக் கிளப்பிய நிலையில், அதே பாணியில் விண்ணப்பித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. RTPS சேவை மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய நபர் குறித்து முழுமையான விசாரணை நடத்திய கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags: election commission of indiaபீகார்"Dogesh Babu" in the "Dog Babu" line - the controversy continuesBihar is waking up
Share
Tweet
SendShare
Previous Post

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

Next Post

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies