மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தேர்தல் தொடங்கிய நிலையில், 7-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
7-வது கட்டத் தேர்தலில், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்றது.
ஒடிசா மாநில சட்டப் பேரவையில் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7-வது கட்டத் தேர்தலில், மொத்தம் 10 கோடியே 6 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
7-ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 62 புள்ளி மூன்று ஆறு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் 73 புள்ளி ஏழு ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்கு எண்ணும் பணி வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.