தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயமங்களம், மேல்மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் நெல்லிக்காய் அண்டை மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கான கொண்டு செல்லப்படுகிறது.
கோடை மழை காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ நெல்லிக்காய் 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.