புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!
Jun 21, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 வயது இளைஞர் ஒருவர் உலகின் மிகச் சிறிய நாடு ஒன்றை உருவாக்கி, அதிபராகப் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளார். யார் அந்த இளைஞர்? எங்கே உள்ளது அந்த புதிய நாடு? விரிவாகப் பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளான குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையே உள்ளது இந்த மிகச்சிறிய நிலப்பரப்பு. இதன் மொத்த பரப்பே 125 ஏக்கர்தான். டானூப் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த நிலம் குரோஷியாவிற்குச் சொந்தமா?, செர்பியாவிற்கு சொந்தமா? என்பதில் பல ஆண்டுகளாகவே குழப்பம் நிலவி வருகிறது.

இந்த குழப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர், அந்த நிலத்தைத் தனி நாடாக அறிவித்துள்ளார். மேலும், புதிய நாட்டின் அதிபராகவும் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதுதான். அவரது பெயர் டேனியல் ஜாக்சன்.

அந்த 125 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதை, தனது 14 வயதில் டேனியல் அறிந்தார். கேட்பாரற்ற இந்த நிலத்தைத் தனி நாடாக மாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அப்போதே அவருக்குத் தோன்றியுள்ளது. இதனைத் தனது நண்பர்களிடம் அவர் தெரிவிக்கவே, அவர்களும் இந்த யோசனையால் கவரப்பட்டனர். இதனை அறிந்த பலரும், பொடி பையன் ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தனர்.

ஆனால், தனது திட்டத்தில் டேனியல் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாக, 2019ஆம் ஆண்டு மே 30ம் தேதி, அந்த சர்ச்சைக்குரிய 125 ஏக்கர் நிலத்தைத் தனி நாடாக அறிவித்தார். அதற்கு  வெர்டிஸ் சுதந்திரக் குடியரசு எனவும் பெயரிட்டார். நாட்டிற்குப் பெயர் வைத்தால் போதுமா? தனி கொடி, சட்டங்கள், அமைச்சரவை, தனி நாணயம் உள்ளிட்டவை வேண்டாமா?

எனவே, அதற்கான வேலைகளை டேனியல் தொடங்கினார். அனைத்து பணிகளும் முடிவடைந்ததை அடுத்து, அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். வெர்டிஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன், செர்பியன் ஆகியவை இருக்கும் எனவும், யூரோ தேசிய நாணயமாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தனது நாட்டிற்கான தனிக் கொடியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், தனி அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியுள்ள அவர், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் வசிக்கும் 400 பேரை தனது குடிமக்களாக அறிவித்துள்ளார். அவர்களுக்குத் தனி பாஸ்போர்ட் வழங்கி,  பலரையும் அவர் அதிர வைத்துள்ளார்.

தனது நாட்டிற்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது குரோஷியா மற்றும் செர்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

Tags: செர்பியாகுரோஷியாA 20-year-old youth who created a new country20 வயது இளைஞர்
ShareTweetSendShare
Previous Post

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

Related News

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies