கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடவிசாமிபுரம், பெண்ணங்கூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையேவுள்ள
வனப்பகுதியில் சுற்றி வரும் சிறுத்தை ஒன்று, பட்டிக்குள் நுழைந்து ஆடுகளையும் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.