கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான வெயில் காணப்பட்ட நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது பத்திரபதிவு அலுவலகம் அருகே மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
அதே சமயம் மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.