மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை பகுதியில் பொருளாராதாரத்தில் பின் தங்கிய மாணவனுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டது.
பல்லவராயன் பேட்டை கிராமத்தை சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவன், அன்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வீரசிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் இவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த பாரதி மோகன் அறக்கட்டளை, மாணவனுக்கு உதவ முன்வந்தது. அதன்படி மாணவனை நேரில் சந்தித்த சமூக சேவகர் பாரதி மோகன் மாணவனின் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.