தனது வாகன அணிவகுப்பை பின்தொடர்ந்து வந்த பெண்ணிடம் காரை நிறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நலம் விசாரித்தார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு விஜயவாடா வழியாக சென்றபோது தன்னுடைய வாகன அணிவகுப்பை பின்தொடர்ந்து வந்த பெண்ணை கவனித்தார்.
உடனே காரை நிறுத்தி அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர், தன்னுடைய பாதுகாவலர்களிடம் கூறி அவரது விவரங்களை கேட்டு பெற்று தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார்.
















