கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தோப்பில் புகுந்து இளநீரை திருடிக் குடித்த மர்ம நபர்கள் உரிமையாளரை எச்சரிக்கும் விதமாக மரத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்த குமாரவேலுக்கு 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த குமாரவேல் மீண்டும் வீடு திரும்பி தனது நிலத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது சுமார் 60 இளநீரை மர்ம நபர்கள் வெட்டி குடித்துள்ளது தெரியவந்தது. மேலும் உரிமையாளரை எச்சரிக்கும் வகையில் மரத்தில் பட்டை நாமம் அடித்த நோட்டீசை ஒட்டிச் சென்ற மர்ம நபர்கள் அதில் செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும் எனவும் எழுதிச் சென்றுள்ளனர்.