Aquafina குடிநீர் பாட்டிலில் தூசிகள் மிதந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெப்சி நிறுவன மேலாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த சிவமணி என்பவர், பெப்சி நிறுவனத்தின் Aquafina குடிநீர் பாட்டிலில் தூசிகள் மிதந்ததாக கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெப்சி நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் பெப்சி நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், முழு அபராதத் தொகையையும் செலுத்தப்படவில்லை என்பத, பெப்சி தொழிற்சாலை மேலாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.