திருச்சி மாவட்டம் லால்குடியில் இடிந்து விழுந்த பள்ளி விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடியில் உள்ள ஆரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்நிலையில் பழமையான இந்த பள்ளி மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.இந்நிலையில் ஒரு மாதமாகியும் சீரமைக்கப்படாமல் உள்ள சுற்றுச்சுவரை அரசு விரைந்து சீரமைத்து தரவேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.