வீண் விளம்பரத்துக்கு எடுக்கப்படும் முப்பெரும் விழா! - அண்ணாமலை
Oct 17, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீண் விளம்பரத்துக்கு எடுக்கப்படும் முப்பெரும் விழா! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை, திமுக ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையில் வரும் ஜூன் 15 அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன்.

முதலில், ஜூன் 14 அன்று நடத்தவிருப்பதாக முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், திமுக முன்னாள் இலாகா இல்லாத அமைச்சர்  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, கடந்த ஆண்டு அதே ஜூன் 14 நாளில்தான் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியும், நூதன முறையில் கட்டண உயர்வைக் கொண்டு வந்து, கோவை பகுதி சிறு குறு தொழிற்சாலைகளை முடக்கி, பொதுமக்கள் வாழ்வாதாரத்தை அழித்தும், ஒரு துறை விடாது அத்தனை தொழில்துறைகளிலும் கமிஷன் கலெக்ஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

கல்வியிலும், தொழில்துறையிலும் கோலோச்சிய கோவை, திமுக ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது. கடந்த முப்பது வருடங்களாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்து, திமுகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.

ஆனால், திட்டத்தை நிறைவேற்ற திமுக எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கௌசிகா நதியும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. ஆனால் திமுகவுக்கு அவை குறித்துக் கவலை இல்லை.

திமுக அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கியிருக்கிறது. ஆனால், தன் வாரிசுக்கு முடிசூட்ட, விழா எடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் முதலமைச்சர்.

கோவை மாநகருக்கு உடனடித் தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான்.

அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை. இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.

உண்மையிலேயே திமுகவுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

கோவை பகுதி நீர்நிலைகளைச் சீரமைத்து, தண்ணீர்ப் பஞ்சத்தைத் தடுத்திருக்க வேண்டும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்ட் அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். சாலைகளை சீரமைத்து, விபத்துகள் நடப்பதைத் தடுத்திருக்க வேண்டும்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை திமுக அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும்.

ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Three great festivals are taken for vain advertising! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

அருவிக்கரையில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!

Related News

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies