ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும்.
அப்போது, உடலில் உள்ள குறைபாடுக்கேற்ப, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்று புகார் தெரிவித்து, மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிப்பட்டது.