பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக முப்பெரும் விழாவில் பேசிய அந்தக் கட்சித் தலைவர்கள், தமிழகத்தில் 40 தொகுதிகளையும் பெற்றுவிட்டதால் நாடாளுமன்றத்தில் நடக்கவிருப்பதை பாருங்கள் என சவால் விடுப்பதாகவும், இதனால் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் மக்களின் மனங்களில் பாஜக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிக வாக்குகள் பெற்றதை சுட்டிக்காட்டிய அவர், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வியூகம் வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.