திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்!- அண்ணாமலை குற்றச்சாட்டு
Oct 20, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jun 18, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் பாமாயிலையும் நிறுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த மே மாதம் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை வழங்காமல் புறக்கணித்த திமுக அரசு, தற்போது இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் முழுமையாக அவற்றை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, மற்றும் பாமாயிலை நிறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகின.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ரேஷன் கடைகளில், ஒரு கிலோ உளுத்தம்பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலையும் நிறுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தேர்தல் விதிகளைக் காரணம் காட்டும் திமுக அரசு, அவை நடைமுறைக்கு வருவதற்குப் பல நாட்கள் முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே, 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய வாணிப கழகம் மூலம் டெண்டர் கோரியிருந்தது என்ன ஆனது?

பல மாவட்டங்களில், பல நூறு டன் அளவிலான தரமற்ற துவரம் பருப்பு, திரும்பி அனுப்பப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த நிறுவனங்கள் மீது திமுக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்கக் காரணங்கள் தேடுவதை நிறுத்தி விட்டு, உடனடியாக, ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு, மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: அண்ணாமலைDMK celebrationpeople protest without getting ration items!- Annamalai alleges
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : நான்சி பெலோசி

Next Post

வெறி கொண்டு மூட்டிய எருமை மாடு அலறி ஓடிய மக்கள்!

Related News

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies