சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழாவின்போது திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கடந்த 1998-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே தேரோட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.