சென்னை திருவொற்றியூரில் தாய் மற்றும் சகோதரரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு நித்தேஷ், சஞ்சய் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தாய் மற்றும் சகோதரரை கொலைசெய்த நித்தேஷ், உறவினர்களுக்கு தம்மை தேட வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைமறைவாகினார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீது நித்தேஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து காசிமேடு பகுதியில் பதுங்கியிருந்த நித்தேஷை கைதுசெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.