கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக்கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
திமுக அரசை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமான பாஜகவினர் திரண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும், தமிழக அரசை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக்கோரியும் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது, பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதனிடையே, ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளிக்க முயன்றார். ஆனால், அவரை பேசவிடாமல், போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.